இந்தியன் 2 விபத்து – சங்கரிடம் விசாரணை

இந்தியன் 2 விபத்து தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சங்கர் உள்ளிட்டோரிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இயக்குநர் சங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படம் உருவாகிறது. அண்மையில் சென்னைக்கு அருகே உள்ள தனியார் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, ராட்சத கிரேன் எதிர்பாரதவிதமாக விழுந்து 3 தொழில்நுட்ப கலைஞர்கள் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று இந்தியன் படப்பிடிப்பு நடைபெற்ற பிலிம் சிட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, நேரில் ஆஜரான இயக்குநர் சங்கரிடமும் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணை குற்றப் பிரிவு துணை ஆணையர் நாகஜோதி ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.

What do you think?

மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் இதுவா?

இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!