கொரோனா மீட்புப் பணியில் இந்திய போர் விமானம்!

னாவின் உகான் நகரிலிருந்து மேலும் பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானத்தை மத்திய அரசு இன்று அனுப்பி வைக்கவுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், 1,749 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவின் உகான் நகரில் இருந்து மேலும் பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானத்தை மத்திய அரசு இன்று அனுப்பி வைக்க உள்ளது.

சீனா செல்ல உள்ள இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் மருந்துகளும் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே மத்திய அரசு அனுப்பி வைத்த இரு விமானங்கள் மூலம் வுகானில் இருந்து 640 இந்தியர்கள், கடந்த 1, 2 ஆகிய தேதிகளில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 406 பேர் டெல்லியில் உள்ள இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர்.

மற்றவர்கள் அரியானா மாநிலத்தில் உள்ள ராணுவ மையத்தில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கிடையே, டெல்லி முகாமில் இருந்த 406 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று இறுதிக்கட்ட பரிசோதனையில் உறுதியானது. எனவே, 17–ந் தேதியில் இருந்து அவர்கள் படிப்படியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

What do you think?

காவலர் பணி நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

ஆம்புலன்ஸை டிராக் செய்ய புதிய செயலி; ஆனாலும் ஸ்பீடு அதேதான்!