பொருளாதாரம் சரிவில் இருந்து மீள வாய்பில்லை – மத்திய அரசு

3-வது காலாண்டிலும் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.7 விழுக்காடு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால், இந்தியா பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.1 விழுக்காடு மட்டுமே இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மூன்றாவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.7 விழுக்காடு மட்டுமே இருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, வேளாண்மை, கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பொருளாதார சுணக்கம் நிலவி வருவதால், இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து மீள வாய்பில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

What do you think?

காப்பி அடித்தால் 2 ஆண்டுகள் தேர்வெழுத தடை!

கேன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் குடிநீர் பாதிப்பு ஏற்படும் அபாயம்!