இந்திய மீனவர்கள் சிறை…!! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்ககோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
கடந்த ஜனவரி 3ம் தேதி அன்று குஜராத்தின் போர்பந்தரில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மட்டுமின்றி 14 இந்திய மீனவர்களும் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ்தளப்பதிவில் அவர் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து IND-GJ-25-MM-3458 மற்றும் IND-GJ-25-MM-1582 என்ற படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் சிறையில் 10 மாதங்களாக சிறை பிடித்து வைத்துள்ள நிலையில் அடுத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் சிறைபிடிப்பது என்பது நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..