ஜப்பான் ஓபன் பேட்மின்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென்..!!
ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். கால் இருதியில் ஜப்பான் வீரர் வாடனபே கோகியுடன் நேற்று மோதிய லக்ஷ்யா சென் 21-15, 21-19 என நேர் செட்களில் வென்று அரை இருதிக்கு முன்னேறி உள்ளனர். 47 நிமிடங்களில் இந்த போட்டி முடிவுக்கு வந்துள்ளது. மற்றொரு கால் இறுதியில் இந்திய நட்சத்திரம் எச்.எஸ்.பிரணாய் உலகில் நம்பர் 1 வீரராக டென்மார்க்கின் ஆக்சல் விக்டருடன் மோதினார்.
ஒரு மணி 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டி விக்டர் 19-21, 21-18, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரட்டை பிரிவின் அரை இறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் வெட்டி ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற செட் கணக்கில் தைவானின் யாங் லீ – சி லின் வாங் இணையிடம் தோல்வி அடைந்தது இந்த இறுதி ஆட்டம் ஒரு மணி நேரம் 10 நிமிடம் நீடித்தது.