‘கொரோனாவால் இந்திய பங்குசந்தைகள் வரலாறு காணாத சரிவு’ வர்த்தகம் நிறுத்தம்!

கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்த்தால் வர்த்தகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் கடந்த சில நாட்களாக சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர் இதனால் இந்திய பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

நேற்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32, 778 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிப்டி 868 புள்ளிகள் சரிந்து 9590 புள்ளிகளில் முடிவுபெற்றது.

இந்நிலையில் இன்றும் கொரோனா வைரஸ் அச்சத்தால் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின்போது வரலாறு காணாத அளவில் சென்செக்ஸ் 3,090 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 29,687 புள்ளிகளானது.

இதேபோல் நிப்டியும் 966 புள்ளிகள் சரிந்து 8, 624 சென்றதால் 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

What do you think?

‘கனடா பிரதமரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ்’ பொதுமக்கள் அதிர்ச்சி!

‘தில்லி படுகொலைக்குக் காரணமான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்’ வைகோ கோரிக்கை!