“கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம்” – கமல் உருக்கம்

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு, செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்றிரவு படப்பிடிப்பு தளத்தில் இருந்த கிரேன் ஒன்று திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது, சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 9 பேர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கு காரணமான கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, கீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த 3 பேரின் உடல்களுக்கும் நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய கமல், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். தனது வீட்டில் ஏற்பட்ட சோகம் என கூறிய அவர், கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்றதொரு கொடூர விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கமல் வலியுறுத்தினார்

What do you think?

ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை – சபாநாயகர் தனபால் அதிரடி

வேளாண் பாதுகாப்பு மண்டலம்: விளக்கம் கேட்கும் வைகோ