ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்தியர்கள் மீட்பு!

ஈரானில் தவித்த 58 இந்தியர்களை இந்திய விமானப்படையின் விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்நோய், 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3136 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மீட்பு விமானம்

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஈரானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. குறிப்பாக அவர்களை மீட்க இந்திய விமானப்படையின் விமானம் நேற்று இரவு ஈரான் புறப்பட்டுச் சென்றது.

முதற்கட்டமாக இன்று காலை 58 இந்தியர்களுடன் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. விமானம் 58 பேருடன் புறப்பட்டபோது எடுத்த புகைப்படங்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட இந்தியர்கள் விமானத்தில் ஏற தயாராக இருக்கும் காட்சி

“சவாலான சூழ்நிலையில் செயல்படும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள இந்திய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி. இந்திய விமானப்படைக்கு நன்றி. ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பாராட்டுகிறேன். அங்கு சிக்கித் தவிக்கும் மற்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும் பணியாற்றி வருகிறோம்’ என்று ஜெய்சங்கர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

-1 points
Upvote Downvote

விஜயகாந்தை விட்டு விட்டு வாசனுக்கு சீட் கொடுக்கும் அதிமுகவின் பின்னணி என்ன?

சீமான் மீது கமிஷனரிடம் புகார் – நடிகை விஜயலட்சுமி அதிரடி