“இந்திரா பெல்லோஷிப்” மாற்றத்தை உருவாக்க நினைக்கும் பெண்கள்…!! ராகுல்காந்தி வேண்டுகோள்..!!
உண்மையான சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட பெண்களின் பங்களிப்பு அரசியலில் தேவை., எனவே இன்னும் அதிக பெண்கள் அரசியலில் சேர்ந்து மக்களுகாக பணியாற்ற வேண்டுமென ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்..
தற்போது பெண்கள் பணிபுரியாத இடம் மட்டுமின்றி பெண்கள் ஆட்சி செய்யாத இடமே இல்லை என சொல்லலாம் அப்படியாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி உண்மையான சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட பெண்களின் பங்களிப்பு அரசியலில் தேவை.,
அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க கடந்த ஆண்டு “இந்திரா உறுப்பினர் சேர்க்கை” மூலம் ஆங்காங்கே முகாமிட்டு பெண்களை உறுபினர்களாக சேர்த்தோம்.. தற்போது அந்த முயற்சி இன்று மாநிலம் முழுவதும் பெண்கள் தலைமைத்துவத்துக்கான சக்தி வாய்ந்த இயக்கமாக மாறி உள்ளது.
அதிக அளவில் பெண்களை மையமாக வைத்து அரசியல் செய்யும் ஆட்சி விரைவில் வர வேண்டும் அதற்காக நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். யதார்த்தத்தில் மாற்றத்தை உருவாக்க நினைக்கும் பெண்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்.
சக்தி அபியான் திட்டத்தில் சேர வேண்டுமென நான் கேட்டு கொள்கிறேன். இதன் மூலம் வலுவான கட்டமைப்புகளை, அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமங்கள் முதல் நாடு முழுவதும் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்கலாம்” என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்., அதில் கூறியிருப்பதாவது.., “ஓராண்டுக்கு முன்பு, அரசியலில் பெண்களின் குரலைப் பெருக்கும் நோக்கத்துடன் “இந்திரா பெல்லோஷிப்” தொடங்கினோம். இன்று, இந்த முயற்சி பெண்களின் தலைமைத்துவத்திற்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளர்ந்துள்ளது.
உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்கு அரசியலில் அதிக பெண்கள் தேவை. “ஆதி அப்பாடி, பூரா ஹக்” இந்த காரணத்திற்காக நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உள்ளடக்கியது. உண்மையான மாற்றத்தை உருவாக்க ஆர்வமுள்ள அனைத்து பெண்களையும் “சக்தி அபியான்” அமைப்பில் இணைந்து, பெண்களை மையமாகக் கொண்ட அரசியலில் தீவிர பங்கேற்பாளர்களாக மாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஈடுபடுவதன் மூலம், வலுவான அடிமட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கும், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நீங்கள் பங்களிப்பீர்கள். எங்களுடன் இணைந்து இன்றே http://shaktiabhiyan.in இல் பதிவு செய்யுங்கள். ஒன்றாக, கிராமங்கள் முதல் நாடு முழுவதும் மாற்றத்தை உருவாக்க முடியும். என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..