உலகத்தின் முன்னணி நிறுவனமான கூகிள் நிறுவனத்திற்கு இந்தியா தொழில் போட்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கவே விதிக்கப்பட்ட அபாரத்தை செலுத்த தவறியதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உலக தொழிநுட்பத்தை முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனம் இந்தியாவின் தொழில் போட்டி விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த நிறுவனத்தின் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு இந்திய மதிப்பில் ரூ.2224 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதில், அக்டோபர் மாதம் 20ம் தேதி கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஆதிக்கத்தை விதிமுறைகள் மீறி செயல்பட்டதால் 1337 கோடியும் அதனை தொடர்ந்து அதே வாரத்தில் கூகுல் பிலே ஸ்டோரில் விதிமுறைகளை மீறியதால் அக்டோபர் மாதம் 25ம் தேதி 936 கோடி அபராதம் விதித்தது.
இதனை அந்த நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இதனால் அந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் இந்தியா தொழில் போட்டி ஆணையம் கூகிள் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த சமயத்தில் தான் அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அபராதத்தை கட்டுமா அல்லது அதிலிருந்து தப்பிக்குமா என்று தீர்ப்பு வந்தபின் தான் தெரியும்..!