கள்ளகாதலால் மோகம்..! 4 வயது குழந்தை பலி..! கள்ளக்காதலன் சிக்கியது எப்படி..?
இன்ஸ்டாகிராமில் மலர்ந்த கள்ளக்காதலால் நான்கு வயது குழந்தையை அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் கைது..
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28). இவருடைய மனைவி சுபா (26). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இவர்களுடைய மகன் பழனி வேல் ராஜன் (4). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். திவ்யா தனது 4 வயது குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பார்த்தசாரதிக்கும், திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம் ( சமூக வலைதளம்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 4 வயது குழந்தையுடன் திவ்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறிய இந்த கள்ள காதலர்கள் வீட்டில் இருந்து எடுத்து சென்ற நகை மற்றும் பணத்தை வைத்து ஒவ்வொரு சுற்றுலா தளமாக சுற்றியுள்ளனர். அதன் பின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகர் பகுதியில் கணவன் மனைவி எனக்கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பார்த்தசாரதி, திவ்யா இருவரும் உல்லாசம் அனுபவிக்க குழந்தை இடையூறாக இருந்ததால் பார்த்தசாரதி குழந்தை பழனிவேல்ராஜனை அடிக்கடி அடித்து துன்புறுத்திள்ளார். கடந்த (ஞாயிற்றுக்கிழமை) அன்று பார்த்தசாரதி திவ்யாவுடன் தனிமையில் இருந்த போது நான்கு வயது குழந்தை பழனிவேல் ராஜன் உடல் நலம் சரியில்லாமல் அழுதுள்ளான்.
இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி, குழந்தையை தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த தாய் திவ்யாவையும், சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
பார்த்தசாரதி தாக்கியதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திவ்யாவிற்கும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 4 வயது குழந்தை வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தை பழனிவேல்ராஜன் நேற்று முன்தினம் (செவ்வாய்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
4 வயது குழந்தை பழனிவேல் ராஜனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் இது பற்றி கோவை அரசு மருத்துவமனையில் இருந்து மங்கலம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து மங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது பார்த்தசாரதி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் 4 வயது குழந்தை பழனிவேல் ராஜனின் பிரேத பரிசோதனை கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம்மில் வளர்ந்த கள்ளக்காதலால் உல்லாசத்திற்கு தடையாக இருந்த குழந்தையை அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..