இன்ஸ்டா பண மோசடி..!! வாலிபர் அதிரடி கைது..!! உஷார் மக்களே உஷார்..!!
திருப்பத்தூரில் இன்ஸ்டாகிராம் யூடியூபில் வந்த வீடியோவை வைத்து ரூபாய் நாணயத்திற்கு கூடுதலாக பணம் தருவதாக மக்களிடம் நாணயத்தை பெற்ற நபரிடம் போலீசார் விசாரணை..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சிதம்பரனார் தெரு முகமது ஹசான் இவர் பேருந்து நிலையம் அருகே பழைய நாணயம் மற்றும் நாணயத்தில் உள்ள வருடங்களை வைத்து ஒரு ரூபாய் நாணயத்திற்கு 10 ஆயிரம் வழங்குவதாக விளம்பரப்படுத்தி இருந்தார்.
இதனால் பணத்தின் மீது ஆசைப்பட்ட மக்கள் அவரிடம் பழைய நாணயங்களை எடுத்துச் சென்று காண்பித்து வந்தனர் ஆனால் அதில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது எனக் கூறி ஞானத்தை பெற்றுக்கொண்டு குறைந்த பணத்தை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அதிகளவில் மக்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் முகமது ஹசானை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் அதிகளவில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் இல் வெளியான பழைய நாணயத்திற்கு 5 லட்சம் இருந்து 10 லட்சம் வரை வழங்குவதாக வெளியான வீடியோவை வைத்து இவர் குறைந்த விலையில் இங்கு நாணயத்தை வாங்கி அவரிடம் விற்க முயன்றது தெரியவந்தது அதை தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..