மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் பணி தீவிரம்..!!
தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாட்டை சீர்குலைக்கும் தமிழ்நாடு ஆளுநர் .ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் திருப்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதிகாலை நேரத்தில் உடல்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் 75 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழக நலனுக்கு எதிராகவும் தமிழ் நாட்டு மக்களுக்கு எதிராகவும் ஆளுநர் செயல்படுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மாநில அரசின் செயல்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப் படுகிறது.
தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து உட்பட, 19 சட்ட மசோதா கையெழுத்திடாமல், தொடர்ந்து மக்களுக்கு விரோத போக்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செயல் படுவதால் அவரை திரும்ப பெறக்கோரி, திருப்பூர் இராயபுரம், கருவம்பாளையம் பகுதி கழகத்தின் சார்பில் “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்” அமைப்பினர் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக, ஒரு பெரும் நிகழ்வு பகுதிக்குள் கழக செயலாளர் சரவணன், தலைமையில் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் துவக்கிவைத்தார். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் அதிகாலை நேரம் உடல்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர். தொடர்ந்து மதிமுக -வின் சார்பில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வை பார்த்த மாற்று கட்சியை சேர்ந்த ஒருவர், பெரியாரின் நெறியை தழுவுங்கள் என்ற புத்தகத்தை கொடுத்து வாழ்த்துக்கள் கூறினார்.
வருகின்ற ஜூலை 20ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் இருந்து ஒரு கோடி கையெழுத்துக்களை பெற்று ஜனதிபதிக்கு அனுப்பபடும் என அவர் கூறினார். இதுவரை திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் கையெழுத்து பெற்று உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.