எனக்கும் அந்த ஆசை இருக்கு ஆனா..? நடிகை சமந்தா பேட்டி..!!
தெழுங்கு நடிகையான சமந்தா முதன் முதலில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.. ஆனால் அதற்கு முன்னரே மாஸ்கோவின் காவேரி என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்..
கடந்த 2020ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இருப்பினும் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு மயோசிட்டிஸ் என்ற நோய்க்கான சிகிச்சைகளுலும் ஈடுபட்டு வருபவர் தற்போது சிட்டாடால் தொடரில் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த தொடரில் பிரமோஷன் நிகழ்ச்சிகள் குறித்து சமந்தா கூறும்போது அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு ஒரு பெண் தாயாவது ஒரு அழகான அனுபவம் அதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். என்னை பொருத்தவரை குழந்தை பெற்றெடுக்க வயது ஒரு தடை இல்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண் தாயாகலாம்..
எனக்கும் அந்த ஆசை இருந்தது, ஆனால் விதி என் வாழ்க்கையை மாற்றிவிட்டது என நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார்..