மது போதையில், போதை ஆசாமி செய்த செயல்..! மது ஆசாமிகளுக்கு விருந்து வைத்த காவல்துறையினர்..!!
கெங்கவல்லி காவல் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் சாராயத்தை குடித்து விட்டு வாலிபர்கள் மது போதையில் ரகளை,
ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்ட நபரை தாக்கி இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை கைது செய்யக் கோரியும் சாராய விற்பனையை தடுக்கக்கோரி பொது மக்கள் சாலைமறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிகாலை முதலே சட்டவிரோதமாக சாராயம் மற்றும் அரசு டாஸ்மாக் மதுபாட்டில்கள் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்த நிலையில் கெங்கவல்லி காவல் நிலையம் அருகே உள்ள ஆறாவது வார்டு ஒட்டர் தெருவில் வசிக்கும் பிரபல சாராய வியாபாரி பாபு என்பவர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மீண்டும் அவரது குடும்பத்தார் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இன்னிலையில் அதிகாலையில் சாராயம் குடிக்க வந்த மூன்று வாலிபர்கள் சாராயம் குடித்து விட்டு குடியிருப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சத்தம் போட்ட தெரு நாய்களை மதுபோதையில் இருந்த வாலிபர்கள் கல்லால் தாக்கியுள்ளனர், நாயை தாக்கிய கற்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்குள் இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.
இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மூன்று பேரும் கிருஷ்ணமூர்த்தியை தாக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர்,
இதையறிந்த அப்பகுதி மக்கள் ரகளையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களையும் கைது செய்யக்கோரியும் குடியிருப்பு பகுதியில் நடைபெறும் சாராயம் மற்றும் அரசு டாஸ்மாக் மதுப்பாட்டில்கள் விற்பனையை தடுக்கக்கோரி பொது மக்கள் திடிர் சாலைமறியலில் ஈடுபட்டனர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..