ஐபிஎல் 2020 : முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதல்

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதவுள்ளன.

மும்பையில் மார்ச்-29 தொடங்கி மே-24 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டியின் 13வது சீசன் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்க உள்ள இதில் மொத்தம் 60 போட்டிகள் நடைபெற உள்ளன. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 29-ஆம் தேதி நடக்கவிருக்கும் முதல் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. பின்னர், ஏப்ரல் 2ஆம் தேதி சிஎஸ்கே தனது இரண்டாவது போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் 3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும், ஏப்ரல் 11-ம் தேதி 4வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனும், ஏப்ரல் 13-ம் தேதி 5வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும் சிஎஸ்கே மோதுகிறது.

ஏப்ரல் 17-ம் தேதி பஞ்சாப் அணியுடனும், 19-ம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும், 24-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும் சிஎஸ்கே எதிர்கொள்கிறது. 27-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடனும், 30-ம்தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும், மே 4-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. மே 7-ம் தேதி கொல்கத்தா அணியுடனும், 10-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும்,14-ம் தேதி ஆர்சிபி அணியுடனும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது.

What do you think?

வெளியானது ஜாமியா மாணவர்களை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

ஜப்பான் கப்பலில் 3 இந்தியர்களுக்கு கொரோனா; மொத்தம் 355 பேர் பாதிப்பு