கொரோனாவால் ஐபிஎல் போட்டிக்கு தடை? கங்குலி விளக்கம்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் தடைப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்று கேள்வி பலரிடமும் எழுந்தது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வருகை தரலாம் எனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Ganguly and ipl trophyக்கான பட முடிவுகள்

இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:- “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெறும்” என்று கூறினார்.

What do you think?

‘எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி’ மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைப்பு!

‘கொரோனா வைரஸ் பீதி’ சென்னையை சுற்றிவரும் ஹாங்காங் பெண்!