‘கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட உலகக்கோப்பை – ஐபிஎல் ரத்தாகுமா?’

கொரோனா வைரஸ் பரவுவதன் எதிரொலியாக ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்று கேள்வி பலரிடமும் எழுந்தது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வருகை தருவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெறும்” என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது டெல்லியில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டிகளையும் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

What do you think?

மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! – ஜி.கே.வாசனுக்கு ஒரு சீட்

சச்சினுடன் பாக்ஸிங் – இர்பான் பதான் மகனின் வைரல் வீடியோ