‘கொரோனவால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு’ ரசிகர்கள் அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகக்குழுவிற்கு நேற்று அறிவுறுத்தி இருந்தது.

மேலும் தலைநகர் டெல்லியில் கோரோனா வைரஸ் பரவாமல் தடுக்க டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 15ம் தேதி வரை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு சிறு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

What do you think?

‘டெல்லியில் ஐபிஎல் போட்டிக்கு தடை’ துணை முதலமைச்சர் அறிவிப்பு!

‘இனி வணக்கம் மட்டும் தான்’ டிரம்ப் எடுத்த திடீர் முடிவு!