ஐபிஎல் குறித்து அடுத்த மாதம்தான் முடிவு எடுக்கப்படும்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து ஏப்ரல் 15-ந் தேதிக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான முடிவுகள் மார்ச் 31-ந் தேதிக்கு பின்னர் தான் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து, ஏப்ரல் 15-ந் தேதிக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 15-ந் தேதிக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிசிசிஐ மத்திய அரசுக்கு கீழ் இல்லை. ஆனால், இது விளையாட்டைப் பற்றியது அல்ல. மக்கள் பாதுகாப்பை பற்றியது எனவே ஏப்ரல் 15-ந் தேதிக்குப் பின் நாட்டின் சூழ்நிலையை பொறுத்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

What do you think?

சென்னையில் 118 விமானங்கள் ரத்து!

தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன!