‘தோண்டப்படும் குழிகள், பலி எண்ணிக்கையை மறைக்கிறதா அரசு?’ வைரலாகும் சாட்டிலைட் புகைப்படங்கள்!

ஈரான் அரசு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக கூறி சாட்டிலைட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவுகிறது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல்வேறுநாடுகளில் பரவி வருகிறது. சீனாவுக்கு அடுத்ததாக கொரோனாவால் அதிகம் உயிரிழந்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இத்தாலி மற்றும் ஈரான் ஆகியவை தான் உள்ளது. ஈரானில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், ஈரான் மூத்த தலைவரின் ஆலோசகர் போன்ற பலர் உயிரிழந்துள்ளதாககூறப்படுகிறது .

இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைப் புதைப்பதற்காக மிகப்பெரும் குழிகள் தோண்டப்பட்டுள்ளது சாட்டிலைட் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மேக்சர் டெக்னாலஜிஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு மைய நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை எடுக்கப்பட்டவை. இவை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 75 மைல் தூரத்தில் இருக்கும் பெஹெஷ்ட்-இ மசூமே கல்லறையைக் காட்டுகின்றன. அதில் மார்ச் 1-ம் தேதி இரண்டு புதிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்தக் குழிகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன.

மேலும் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ஈரானின் கோம் நகரச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில், ஈரான் சுகாதார அமைச்சகம் பொய் கூறுவதாகவும் ஏற்கெனவே 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

தற்போது வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போது சட்டமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு உண்மை என்பது போன்றே தெரிவதாகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் அதை அந்நாட்டு அரசு மூடி மறைப்பதையும் காட்டுவதாக பலரும் கூறுகின்றனர்.

What do you think?

-1 points
Upvote Downvote

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை கடும் சரிவு!

சென்னையை வீழ்த்தி 3-வது முறையாக ஐஎஸ்எல் தொடரின் கோப்பையை வென்ற கொல்கத்தா!