ஈரானின் அடுத்த தாக்குதல்..!! அமெரிக்கா ஜோபைடன் எடுத்த முடிவு..!
ஜோர்தான் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.., இந்த துயர செய்து தற்போது உடகங்களில் வைரலாக பரவி வருகிறது.. அதே சமயம் ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையாத நிலையில்.., அச்சுறுத்தல்கள் அதிகரித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.. இந்த நேரத்தில் ஈராக் விமானப்படை விமானங்களை இஸ்ரேல் நாட்டின் எல்லைகளுக்கு கொண்டு செல்லாமல், எல்லைக்கு வெளியே ஏவுகணை மற்றும் கப்பல்களை இடம்மறித்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்..
அத்துடன் UAVகளின் முதல் அலை இஸ்ரேலில் இருந்து வெகு தொலைவில் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் ஏவுகணைகளின் இரண்டாவது அலையால் இதுவரை
எந்த பாதிப்பும் சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்படுள்ளது.
இருப்பினும் ஜோர்தானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன்.., 10 வயது சிறுவன் ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.., அதுகுறித்த தகவல்கள் தற்போது நம் மதிமுகமிற்கு கிடைத்துள்ளது அதனை பற்றி விரிவாக படிக்கலாம்..
ஜோபைடன் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க வளாகத்தில் அவரின் குழுக்களுடன் கலந்துரையாடும் படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இரண்டு மணித்தியாலங்களிற்கு மேல் பைடன் தனது முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
”ஈரானிடமிருந்தும் அவர்களின் சகாக்களிடம் இருந்தும் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்தில் இருந்து ஈரான் நாட்டை பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது.., அதற்கான ஏற்பாடுகள் மிகவும் வலுப்படுத்தப்பட்டுள்ளது“ எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்க ஆதரவு கொடுக்கும் என்றும் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே சமயம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்., இஸ்ரேல் பிரதமரை தொடர்பு கொண்டு பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..