IRCTC இணையதளம் முடக்கம்..! ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்..!!
பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு போக்குவரத்து இரயில் வழி போக்குவரத்து, பேருந்தில் பயணம் செய்யும் மக்களை விட.., இரயிலில் பயணம் செய்யும் மக்களே அதிகம். நாளொன்றுக்கு இரயிலில் மட்டும் லட்சம் கணக்கான மக்கள் இரயிலில் பயணம் செய்வதாக புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.
அப்படி பயணம் செய்யும் மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் முன்பதிவு செய்கின்றனர். முக்கியமாக IRCTC என்ற செயலியை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நாளொன்றுக்கு இந்த செயலில் மூலம் தங்களின் இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் IRCTC என்ற இணையதளம் திடீரென முடங்கியுள்ளது, இதனால் பல பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமால் தவித்துள்ளனர்.
திடீரென முடங்குவதற்கான காரணம் குறித்து விளக்கம் கொடுத்த IRCTC நிறுவனம், இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதால் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு சில நேரம் பயனாளர்கள் டிக்கெட் கேன்சல் செய்வது வழக்கம் அந்த சமையம் அவர்களுக்கு.., பணம் திருப்பி அனுப்பும் பொழுது சிக்கல்கள் ஏற்படுகிறது. நாங்கள் திருப்பி அனுப்பும் பொழுது அது பயனாளர்களுக்கு திருப்பி கிடைப்பதில்லை.
ரயில் பயணசீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பும் பயனாளர்கள் Ask Disha என்ற செயலியை பயன் படுத்திக் கொள்ளுமாறு IRCTC நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.