பாலினத்தை பார்ட்டி வைத்து அறிவித்த இர்பான்..! சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீஸ்..! அடுத்த கட்ட நடவடிக்கை இது தான்..!
முன்பெல்லாம் நடிகருக்களுக்கு மட்டும் தான் ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனால் தற்போது நடிகர்களை விட அதிக அளவு யூடியூபர்களுக்கு இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பிரபலமானவர் இர்பான்.
அந்த வகையில் 40 லட்சத்திற்கு மேலகா ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இவர் உணவங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளின் ருசி மற்றும் தன்மையை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். மேலும் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி இவருது மனைவி ஆலியா கர்ப்பமாக இருகிறார்.
குடும்பத்துடன் துபாய் சென்ற இர்பான், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தைப் பரிசோதனை செய்து. யூடிப்பில் வீடியோவாக வெளியிட்டள்ளார்.
மூன்று நாட்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையில் கடந்துள்ள அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலினத்தை பார்ட்டி வைத்த இர்பான் :
பொதுவாக வெளிநாடுகளில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிந்து கொள்வதற்காக “ஜென்டர் ரிவில்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்நிகழ்ச்சியில் குழந்தையின் பாலினம் குறித்து பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும் இத்தகைய வழக்கம், இந்தியாவில் நடைமுறையில் இல்லை.
இந்நிலையில் இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்துச் சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொண்டதோடு அதனை பார்ட்டி வைத்து தனக்கு பெண் குழந்தை பிறக்கபோவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலினம் பற்றி கருவிலே அறிவது சட்டபடி குற்றம் :
இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது, அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இர்பானிடம் விளக்கம் கேட்டு வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. பின்னர் இர்பான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
மேலும் இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். என்பதால் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது.
கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் , ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் இர்பான்.
இதற்கான வீடியோவையும் இர்பான் வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மன்னிப்பு கோரினாலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதர்கிடையே இர்பான் குழந்தையின் பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவையும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..