மன்னிப்பு கேட்ட இர்ஃபான்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!!
இந்தமுறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உணவு சம்பந்தான ரிவ்யூ வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் யூடியூபர் இர்பான். இவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அங்குள்ள ஓட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்களில் உள்ள உணவின் சுவை குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வீடியோவில் இருக்கும் காட்சியானது “பிறந்த தன் குழந்தையின் தொப்புள்கொடியை இர்ஃபான் கட் செய்யுமாறு அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்., இதனால் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.,
அதாவது குழந்தையின் தொப்புள் கொடியானது மிகவும் மென்மையானது அதனை மருத்துவர்களை தவிர மற்றவர்களை எப்படி கட் செய்ய விடலாம்.. என கேள்விகள் எழுந்த நிலையில் தனியார் மருத்துவமனையில், பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார்கள் எழுந்த நிலையில்.., “நான் செய்தது தவறு எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என மன்னிப்பு கேட்டு” வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்..
அதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தமுறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, மருத்துவர்கள் மீதும், இர்ஃபான் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவிட்டுள்ளார்..
ஏற்கனவே இர்ஃபான் மீது பெண்ணின் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய வழக்கு., குழந்தை பாலினம் குறித்து தெரிந்து கொண்டது உட்பட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..