அசிடிட்டி பிரச்சனையா ? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
நம் உடலில் இயற்கையாகவே சிறிய அளவில் ஆசிட் சுரப்பி இருக்கும். இது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்காகும். இது அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது தான் அசிடிட்டி ஏற்படுகிறது.
இது ஏற்படுவதற்கு சரியான அளவு உணவு உட்கொள்ளாதது மற்றும் தொடர்ந்து மது அருந்துவது, வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வது போன்றவற்றினால் ஆசிட் அதிகமாக சுரக்கும்.
இந்த அதிகளவிலான ஆசிட் நம் வயிற்றில் உள்ள லேயர்ஸை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கி வயிற்றில் வலியை ஏற்படுத்தும். இது ஆழமாக சென்று அரிக்கும்போது தான் அது அல்சராக மாறுகிறது.
இந்த அசிடிட்டி ஏற்பட மற்றொரு காரணம், காரம், உப்பு, புளிப்பு மூன்றும் உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது தான் . அதுபோன்று நாம் சரியாக சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், செரிமானத்தில் பிரச்னைகள் இருப்பது, புகை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவது, உடல் எடை அதிகம் இருப்பது, வயது முதிர்தல், வெப்பமான சூழலில் அதிகம் இருப்பது போன்றவையும் அமிலத்தன்மையை பெருக்கி, அசிடிட்டியை உருவாக்கும்.
நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், நாள்பட்ட சளி, வாந்தி, மூச்சுத்திணறல் போன்றவையும் பொதுவான அறிகுறிகளாகும். இதுவே, தொடர்ந்து நீடித்தால், பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது குரல்வளை வீக்கம், நாள்பட்ட வறண்ட இருமல், உணவு விழுங்குவதில் சிரமம், நுரையீரல் மற்றும் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண் அல்சர் போன்றவை ஏற்படும்.
நெஞ்செரிச்சல் உணர்வு சில நாள்களாக தொடர்ந்து இருந்தால் , உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அசிடிட்டி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு , அதற்குத் தகுந்த சிகிச்சையை மருத்துவரிடம் பார்த்து கொள்ளவேண்டும் .
இதில் தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் . பொதுவான சிகிச்சை என்றால் நாம் முதலில் செய்ய வேண்டியது நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் . தினமும் நேரத்திற்கு சரியான உணவை உண்ணவேண்டும் . உணவில் உப்பு புளி ,காரம் குறைத்துக்
கொள்ள வேண்டும்.
நெஞ்செரிச்சல் அதிகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். ஒரு வேலை ஹார்ட் அட்டாக்கிற்கான வலியாக கூட இருக்கலாம் . அவர்கள் அசிடிட்டி என்று நினைத்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம். அசிடிட்டியால் உயிருக்கு ஆபத்து இல்லை . ஆனால், அசிடிட்டி வலி போன்று ஹார்ட் அட்டக் வலி வருவது மிகவும் ஆபத்தானது. இதனால் வலி வந்த உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது .
1. தேவையான அளவு ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
3. தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி வேண்டும்.
5. மதுப் பழக்கத்தை விட வேண்டும்.
6. காபி, டீ தவிர்த்தல் நல்லது.
இவற்றையெல்லாம் நாம் சரியாக கடைப்பித்தாலே அசிடிட்டியில் இருந்து உடனடியாக விடுபடலாம்..
– நிரோஷா மணிகண்டன்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..