பாலா செய்யும் உதவிக்கு பின்னால் இருப்பது கருப்பு பணமா..?
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பாலா.
பின்னர் அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், அதில் சம்பாதிக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கர்ணன் பாலா :
இதானல் மக்கள் அவரை கர்ணனாகவும் அன்னைதெரசாவாகவும் பார்க்க ஆரம்பித்தனர். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் பாலாவை அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என்று அழைத்து வருகின்றனர்.
என் பின்னால் வலி மற்றும் வேதனைகள் :
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா நடிகர் விக்கி சிவாவுடன் இணைந்து நடனமாடியும், பல நடிகர்களின் குரல்களில் பேசியும் மாணவர்களை உர்சாகமடைய வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, என்னால முடிவதை சம்பாதித்து மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன்.
ஆனால் பலர் என் பின்னாடி யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லிகிறார்கள். ஆனால் என் பின் கஷ்டங்கள், வலி, வேதனைகள் தான் இருக்கிறது.
அதைத் தாண்டி என் கூட இருப்பவர் லாரன்ஸ் அண்ணா தான், அவருக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.., என கூறினார்.
கருப்பு பணமா :
அண்மையில் ஒரு வீடியோவில் யாருடைய கருப்பு பணத்தையோ நான் வெள்ளை பணமாக மாற்றுகிறேன் என்று சொல்லி இருந்தார்கள்.
நான் கருப்பு பணத்தை எல்லாம் மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தைத் தான் மற்றவர்களுக்கும், என்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்துகிறேன்.
நான் மூன்று வேளை சாப்பிடுவதற்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தேன். இப்போ சம்பாதிக்கிறேன். இதனால், என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். என பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாலா..
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..