நவீன் பட்நாயக்கின் அடுத்த அரசியல் வாரிசு இவரா..? முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலில்..?
ஒடிசா அரசியலில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வந்த விவாதங்கள் நேற்று முடிவுக்கு வந்து விட்டது. நவீன் பட் நாயக் அவர்களின் நிழல் நிஜமாகி இனி ஒடிசா அரசியலில் வெளிச்சம் பட காத்து இருக்கிறது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக இருந்து ஒடிசா அரசாங்கத்தை வழி நடத்தி வந்த ஒடிசா முதல்வரின் தனி செயலாளர் கார்த்திக் பாண்டியன் ஐஏஎஸ் அவர்கள் தன்னுடைய ஐஏஎஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் கார்த்திக் பாண்டிய ன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளத்தின் சார்பாக களம் இறங்குவது உறுதியாகி விட்டது. ஆக ஒடிசா அரசியலில் உயர்ந்த இடத்தை ஒரு தமிழன் பெற இருக்கிறார்.
கார்த்திக் பாண்டியன் ஐஏஎஸ் இந்த பெயர் தான் இப்பொழு து ஒடிசாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் ஒலித்து கொண்டு இருக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு கார்த்திக் பாண்டியன் தான் என்பது உறுதியாகி விட்டது..
பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். ஏன் என்றால் மதுரையில் பிறந்து வளர்ந்து மது ரை விவசாயகல்லூரியில் படி த்து பிறகு ஐஏஎஸ் முடித்து 2000 ல் ஒடிசாவில் துணை கலெக் டராக தன்னுடைய வாழ்க்கை யை ஆரம்பித்த கார்த்திக் பா ண்டியன் தான் கடந்த 10 வருட ங்களாக நவீன் பட்நாயக்கை இய க்கி வருகிறார் என்பதை அறிந்து ஒரு தமிழனாக நமக் கு பெருமை தானே..
ஒரு சாதாரண ஐஏஎஸ் அதிகாரியாக ஒடிசாவில் பதவி வகித்த கார்த்திக் பாண்டியன் அங்கு ஒடிசாவை சார்ந்த சுஜாதா ஐஏஎஸ் அவர்களை திருமணம் செய்து ஒடிசா மாநிலத்தையே சொந்த மாநிலமாக மாற்றி கொண்டார்.
2000 ம் ஆண்டில் துணை கலெக்டராக ஒடிசாவை சுற்றிய கார்த்திக் பாண்டியன் 2007- 2011 ஆண்டுகளில் நவீன் பட் நாயக்கின் சொந்த மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய பொழுது நவீன் பட்நாயக்கின் கவனத்தை ஈர்த்தார்.
இதன் விளைவாக 2011ல் முதல்வர் அலுவலகத்தின் செயலாளர் என்கிற உயர்ந்த இடத்திற்கு சென்றார். முதல்வர் அலுவலகத்தில் நுழைந்த பிறகு கார்த்திக் பாண்டியன் செய்த ஒரு மிகப்பெரிய வேலை தான் அவரை இப்பொழுது ஒடி சாவின் நிழல் முதல்வர் என்கிற நிலைமைக்கு கொண்டு வந்தது.
நவீன் பட்நாயக் ஒடிசாவின் சக்தி வாய்ந்த முதல்வர் என்று கொண்டாடப்பட்டாலும் அவரை அன்றும் இன்றும் இயக்கி கொண்டு இருப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் தான். நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் 1997 ல் மறைந்த பிறகு பிஜூ ஜனதா தளம் என்கிற அரசியல் கட்சியை உருவாக்கியவர் நவீன் பட்நாயக் அல்ல.
ஒடிசா அரசியலில் ஒடிசாவின் சாணக்யா என்று அழைக்கப்படும் பியாரி மோகன் மொஹ பத்ரா ஐஏஎஸ் தான் பிஜூ ஜன தா தளத்தை உருவாக்கி நவீன் பட்நாயக் என்கிற முதல்வரை உருவாக்கியவர் பியாரி மோகன்..
மொஹபத்ரா நவீன்பட் நாயக்கின் தந்தை பிஜூ பட் நாயக்கின் அரசியல் மூளையாக இருந்து ஒடிசா அரசை இயக்கி வந்தவர். பிஜூ பட் நாயக் மறைவுக்கு பிறகு ஒடிசா மொழியை எழுதப்படிக்க தெரியாத நவீன் பட்நாயக்கை ஒரு அரசியல்வாதியாக உருவாக்கி 2000 ல் பிஜே பியுடன் பிஜு ஜனதாதளத்தை கூட்டணி சேர வைத்து வெற்றி பெற வைத்து முதல்வராக்கி அழகு பார்த்தவர் ப்யாரி மோகன் மொஹபத்ரா தான்.
இதன் விளைவாகவே ப்யாரி மோகன் ஐஏஎஸ் பதவியை விட்டு விலகி பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் ராஜ்யசபா எம்.பி பிஜூ ஜனதா தளத்தின் நாடாளுமன்ற தலைவர் என்று பிஜூ ஜனதா தளத்தை தன்னுடைய பாக்கெட்டில் வைத்து இருந்தார்.
கார்த்திக் பாண்டியன் ஐஏஎஸ் முதல்வர் :
ஆனால் கார்த்திக் பாண்டியன் ஐஏஎஸ் முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆபிசில் நுழைந்த பிறகு பியாரி மோகனின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வர ஆரம்பித்தது.
பியாரி மோகன் நவீன் பட்நாயக்கை கவிழ்த்து விட்டு ஒடிசா முதல்வராக சதி செய்து கொண்டு இருக்கிறார்.., என்று கார்த்திக் பாண்டியன் நவீன் பட்நாயக்கிடம் ஓத ஆரம்பித்தார்.
2012 மே 29 ம் தேதி கார்த்திக் பாண்டியன் ஐஏஎஸ் பிறந்த நாள். நவீன் பட்நாயக் லண்டனில் இருந்தார். அப்பொழுது கார்த்திக் பாண்டியன் பியாரி மோகன் வீட்டில் 33 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் கவர்னரை சந்தித்து உங்களை பதவி நீக்கம் செய்ய கடிதம் அளிக்க இருக்கிறார்கள் என்று நவீன் பட்நாயக்கிடம் போன் போட்டு கூறினார்.
லண்டனில் இருந்த நவீன் பட்நாயக்கிற்கு அது தான் முதல் வெளிநாட்டு பயணம். பாருங்கள் 2000 ல் ஒடிசா முதல்வராகிய நவீன் பட்நாயக் 2012 ல் தான் வெளிநாட்டுக்கே அரசு முறை பயணம் சென்றார் என்றால் அவருடைய அரசியல் எந்த அளவிற்கு இருந்து இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
நம்முடைய முதல்வர் ஸ்டாலின் 2021 ல் முதல்வராகி இரண்டே வருடங்களில் பல நாடுகளுக்கு போய் சுற்றி விட்டு வந்து விட்டார்.
இதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட குடும்பம். அதனால் உலகின் எந்த மூலையிலும் ஆட்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஆனால் நவீன் பட் நாயக் பியாரி மோகன் என்கிற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மூளையை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்தவர். அவரை நம்பியே கட்சியை நடத்தியவர். அதனால் அவரால் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக அப்பொழுது செயல் பட முடியவில்லை.
இதனால் நவீன் பட்நாயக்கின் முதல் வெளிநாட்டு பயணத்தில் லண்டனில் மீடியாக்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் அனைத்து நிகழ்ச்சிகளையும் கோபத்தில் ரத்து செய்துவிட்டு ஓடி விட்டார்.
நவீன் பட்நாயக்கின் பதவி நீக்கம் :
இந்த நேரத்தில் கார்த்திக் பாண்டியன் நவீன் பட்நாயக்கிற்கு போன் செய்து ஐயா உங்களை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி செய்கிறார் என்று கூற கோபத்தில் இருந்த நவீன் பட்நாயக் பியாரி மகன் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்.
நவீன் பட்நாயக்கின் பிரைவேட் செகரட்டரி :
2012 மே 29ம் தேதி தன்னுடைய பிறந்த நாள் அதனால் லண்டன் வர வில்லை என்று நவீன் பட்நாயக்கை லண்டனுக்கு அனுப்பி விட்டு அவர் ஒடிசாவில் இல்லாத நேரத்தில் கட்சியை உடைக்க பியாரி மோகன் சதிசெய்தார் என்று வெடி வைத்து ஒடிசாவின் அரசியல் சாணக்கியர் பியாரி மோகனின் அர சியல் வாழ்வை முடித்தவர் கார்த்திக் பாண்டியன்.
அதற்கு பிறகு கார்த்திக் பாண்டியன் நவீன் பட்நாயக்கின் பிரைவேட் செகரட்டரியாகி ஒடிசா ஆட்சியையும் பிஜூ ஜனதா தளத்தையும் கைப்பற்றி நவீன் பட்நாயக்கின் நிழலாகவும் ஒடிசவின் நிழல் முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். 2019 ஒடிசா சட்டமன்ற தேர்தலில் 5 வது முறையாக வெற்றி பெற்ற நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்ற நாள் எது தெரியுமா..?
2019 மே மாதம் 29ம் தேதி இது தான் கார்த்திக் பாண்டியனின் பிறந்த நாள். ஆக வருகின்ற மே 29 ம் தேதி கார்த்திக் பாண்டியன் ஒடிசா ஆட்சியில் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பார் என்று உறுதியாக நம்பலாம்.
அந்த அளவிற்கு தன்னுடைய அரசியலை மிக புத்திசாலித்தனமாக அமைத்து வருகிறார்.. கார்த்திக் பாண்டியன்.
நவீன்பட்நாயக்கின் அரசு சார்ந்த திட்டங்கள் பற்றிய அனைத்து விளம்பரங்களிலும் அவருடன் கார்த்திக் பாண்டியன் சிரித்து கொண்டே நவீன் பட்நாயக்கிற்கு அடுத்து நான் தான் என்று ஒடிசா மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..