தீபம் கனவில் வந்தால் நல்லதா..? தீபத்தின் முகங்கள்..!!
கனவில் தீபம் அல்லது ஹாரத்தி பார்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. உங்களுக்கு நல்ல காலம் தொடங்கப் போகிறது என்று அர்த்தம். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். இத்துடன் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்..
தீபம் ஏற்ற வேண்டிய திசை :
குத்துவிளக்கை கிழக்கு முகம் பார்த்தவாறு ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் அதிகரிக்கும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும், செல்வம் உண்டாகும்.
அதேபோல், தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
எந்த எண்ணெயில் ஏற்ற வேண்டும் :
பசு நெய்- செல்வம்.
நல்லெண்ணெய்- உடல், ஆரோக்கியம்.
விளக்கெண்ணெய்- புகழ், தாம்பத்திய சுகம்.
இலுப்பெண்ணெய்- ஜீவ சுகம், ஞானம்.
புங்க எண்ணெய்- முன்னோர்களின் ஆசி.
இந்த ஐந்து வகையான எண்ணெய்களை கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் அனைத்து நன்மைகளும், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..