தோல்வி பயத்தில் மோடியா..? முதலமைச்சர் ஸ்டாலினின் சூறாவளி பிரச்சாரம்..!!
திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்களுக்கு ஆதரவு திரட்டினார், திருச்சி சிறுகனூறில் திமுகவின் கூட்டணி கட்சியின் வேட்பாளர் மதிமுக துரைவைகோ அவர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “தி.மு.க-வில் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருந்தது திருச்சி தான். திருச்சி பாதை எப்பொழுதும் வெற்றி பாதை. கடந்த 2021-ம் ஆண்டு விடியலுக்கான கூட்டத்தை துவங்கினோம் அது மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தல் பாசிச பா.ஜ.க-வை தோற்படிப்பதற்காக வருகிற தேர்தலில் யார் பிரதமர் என்பதை நீங்கள் முடிவு செய்து. செயல்படுங்கள். தற்போது இந்தியாவிற்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி தேர்தல் முடிந்ததும் வெளிநாட்டில் தான் இருப்பார்.
‘பா.ஜ.க-வை பார்த்து தி.மு.க-வினருக்கு தூக்கம் வரவில்லை’ என்கிறார் மோடி. ஆனால், தன் ஆட்சி முடிய போகிறது என்பதால் மோடிக்கு தான் தூக்கம் வரவில்லை. அவரின் தோல்வி பயம் அவரின் முகத்திலும், கண்களிலும் தெரிகிறது. என பேசினார்.
அதனைதொடந்து, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர், நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் முதல்வரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் விளையாட்டு வீரர்களின் விருப்பத்தின்படி கைப்பந்தை அடித்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், காமராஜர் சந்தைக்குச் சென்று வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார். அங்கும் முதல்வரிடம் வியாபாரிகள், பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, பழைய பேருந்து நிலையப் பகுதியில் தேநீர் அருந்திய முதலமைச்சர், விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
இந்த பிரசாரத்தின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச. முரசொலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைதொடந்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகேயுள்ள ஊர்க்குடியில் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச. முரசொலியையும், நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜையும் ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை முதல் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வாக்குகளை சேகரிக்க உள்ளார்.
இன்று மாலை ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை துவக்குகிறார். மாலை 6 மணிக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் பகுதியிலும், இரவு 8.30 மணிக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலும், இரவு 9.15 மணிக்கு தேனியின் ஆண்டிப்பட்டி பகுதிகளும் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..