லோக்சபா தேர்தலில் அநியாயமா..? ஐநா விளக்கம்..! அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி..!!
லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்த்தல் கலவரம் இன்றி நடக்குமா அல்லது முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்கள் ஏற்படுமா..? என ஐநா கேள்வி எழுப்ப அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த முறையும், நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.. முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் முழுவதும் 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் ஆகியவை சலசலப்பை கிளப்பியுள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இந்த விவகாரம் பெரும்
சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த செய்தி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது” செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க தூதரகம் கண்காணித்து வருகிறது. அதுகுறித்து பேசிய அவர், சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கான நியாயமான, கோரிக்கைகளை சரியான நேரத்தில் அமல்படுத்த வேண்டும். மற்றும் இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம் எனவும் பதிவிட்டுள்ளார்..
அதேபோல ஜெர்மனி நாட்டின், “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே கெஜ்ரிவாலும் நியாயமான, பாரபட்ச விசாரணைக்குத் தகுதியானவர் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் கருத்துக்கள் தற்போது இந்தியாவிற்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தற்போது ஐநாவும் கெஜ்ரிவால் விவகாரத்தில் இந்தியாவை சூசகமாக விமர்சனம் செய்துள்ளார். அதவாது “இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்” பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்.., வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம் எனவும் ஐநா-வின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் கருத்தை கேட்டபின் அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, “தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை நாங்கள் பார்த்துகொள்வோம். எனவே, அதற்கு மற்றவர்களின் கருத்துக்கள் தேவையில்லை அதை பற்றி மற்றவர்கள் கவலை கொள்ள வேண்டாம்”. என பதில் அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..