என்னது ஆணின் வயிற்றில் கருப்பையா..? அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்…!
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கிர் மிஸ்ட்ரி. 46 வயதாகும் இவருக்கு, கடந்த சில தினங்களாக அடிவயிற்றில் தீராத வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றை ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவருக்கு, ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஸ்கேன் ரிப்போர்டில் அடிவயிற்றில் சதை இருப்பதாகவும், அது அருகில் உள்ள உடலுறுப்புகளை அழுத்துவதால், குடலிறக்க பிரச்சனை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவர், இதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கோரி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது, அவரது வயிற்றின் அடியில் இருப்பது சதை அல்ல என்றும், அது கருப்பையும் என்றும் தெரியவந்தது. இதனை கண்ட மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
பின்னர் கருப்பையை நீக்கிய மருத்துவர் பிறப்பிலேயே இந்த பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது என்றும், இதனால் பெண்மை சம்பந்தமான அம்சங்கள் எதுவும் இவருக்கு இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு, ராஜ்கிர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-பவானி கார்த்திக்