ஒரு தொலைக்காட்சி உருவாக்கத்திற்கு பின் இப்படி ஒரு கதை உள்ளதா..?
நலம் வாழிய நலனே..!
நமது மதிமுகம் தொலைக்காட்சி வருகின்ற ஜூலை 14ம் தேதி 9ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது. அதனை முன்னிட்டு என்னுடைய வாழ்த்துக்களோடு ஒரு சிறப்பு நேர்காணலில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நம் மதிமுகம் தொலைக்காட்சி வாழ்த்துவோம் நெஞ்சங்களே..
அன்பின் தோழமைகளே மதிமுகம் தொலைக்காட்சியின் நெறியாளர் லயோலா கல்லூரியின் ஊடகத்துறை மாணவி மஞ்சுளா பகுதி நேரப் பணியாக துறைசார்ந்து பயிற்சி பெறுவதற்கு மதிமுகம் தொலைக்காட்சி மாணவி மஞ்சுளாவிற்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.. மிகவும் பாராட்டுக்குரியது
தொலைக்காட்சி நடத்துவது என்பது எளிதான காரியமல்ல கோடிக் கணக்கான முதலீடு தேவை சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நம்மைப் போன்றவர்கள் தொலைக்காட்சியைப் பார்கலாம்.. தொலைக்காட்சி நடத்த ஆசைப்பட்கூடாது அது இமயத்தை தோளில் சுமக்கும் செயல் இதைத் துவக்கத்திலேயே சகோதரர் திரு தாயகம் தங்கதுரை இடம் சொன்னேன்…
திருப்போரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தம்பி லோகு அவர்களின் இல்லத்தில், தலைவர் திரு.வைகோ எம்பி அவர்களிடம், தாயகம் தங்கதுரையின் தொலைக்காட்சி துவங்கப் போகும் என்னத்தைச் சொன்ன போது முதலில் இனைய வழி தொலைக்காட்சி என்று தான் நினைத்தார்.
பின்னர் அது வான் அலையில் ஒளிபரப்பாகப் போகிறது, என்றவுடன் ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் நம் ஆட்கள் முதலீடு செய்து பனப் பிரச்சினையில் சிக்கி கொள்ளக் கூடாது என்று கவலைப் பட்டார். மனிதநேயம் கொண்ட தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள்
பின்னர் சகோதரர் திரு தாயகம் தங்கதுரை, வேளச்சேரி பகுதி கழக செயலாளர் சகோதரர்
திரு செல்லப்பாண்டியன் அவர்களின் தாய்மாமன் மகன் திரு இராமசாமி ஆகியோர் இணைந்து மதிமுகம் தொலைக்காட்சியை மிகுந்த பொருட்செலவில் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து நடத்தி வந்தனர்
திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி, அவர்களின் இலக்கிய உரையை வார இறுதி நாட்களில் ஒளிபரப்பி வந்தனர். கழக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தும் மாநாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்தும் உதவினார்கள்.. தற்போதும் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் 9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது நம் மதிமுகம் தொலைக்காட்சி…
நம்பிக்கை தருவோம் வான் அலைகளில் தடைபடாமல் வளம் வர வாழ்த்துவோம்..! என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்… பயணிப்போம்..
– லோகேஸ்வரி.வெ.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..