உரிமையாளருக்கே இந்த நிலையா..? ஆணவத்தின் உச்சம்..!! கொந்தளித்த ஜோதிமணி..!!
கோவையில் நேற்று அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசிய வீடியோ மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இது பெரும் அவமதிப்பிற்கு உரியது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் நேற்று நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூடத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசியதாவது, “ஒரே பில்லில் (BILL) ஒரு ஜிஎஸ்டி போட்டுவிட்டு மற்றொரு பொருளை அதோடு சேர்க்க சொல்லும்போது அதற்கு ஒரு ஜிஎஸ்டி என 2 ஜிஎஸ்டி போடுவதால் வாடிக்கையாளர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
உதரணத்திற்கு ஒரு பன் (Bun) வாங்கினால் ஜிஎஸ்டி கிடையாது. அதவே அதற்கு வைத்து சாப்பிடும் க்ரீம் வாங்கினால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரும் சில சமயம் திணறுகிறது.” என சொல்லலாம்..
இதை கேட்பவர்களுக்கு “ஆஹா” என இருக்கும். அதுவே மக்களின் பார்வையில் இருந்து யோசிக்கும் போது கடுப்பாக இருக்கும்.. இதுபோன்ற பல உணவுப்பொருள்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கிறது., குறிப்பாக ஒவ்வொரு உணவு வகைக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை அமைச்சர்களின் குழு விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளது.
விமர்சனங்களை பற்றி கவலையில்லை :
பல மாதங்களுக்கு மேலாக ஹோட்டல் உரிமையாளர்கள்கள் ஜிஎஸ்டி பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் முன்வைத்துள்ளனர் பெரியவர் ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்பவர்களுக்கு கூட ஆதாயமாக தெரியும்.. என்னை பற்றி வரும் விமர்சனங்களைப் பற்றி நான் எதுவும் கவலைப்பட போவதில்லை.. அவர்களின் கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்..
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி :
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி “தொழிலதிபருக்கு நிகழ்ந்த இதை நான் மிகவும் அவமதிப்பிற்கு உரியதாக நான் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
கோவையில் புகழ்பெற்ற உணவகங்களில் ஒன்றானது “அன்னபூர்ணா உணவகம்” கோவையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க இவர்களுக்கு கிளை இருக்கிறது இந்த ஹோட்டல் நிறுவனங்களின் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் அவர்களது கருத்துக்களை முன்வைத்து பேசியது சரி.., அதுவே உரிமையாளர் ஸ்ரீனிவாசன் சொன்னது நாம் யோசித்து பார்க்க வேண்டிய ஒன்று “ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளது” ஜிஎஸ்டி போட வேண்டிய பொருள்களை போடாமல் இருக்கிறோம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய உணவு ஜிஎஸ்டி வசுழிக்கிறோம் என்பது சரியானது;;
ஒரு சாதாரண கடையாக ஆரம்பித்து அதில் வெற்றிகரமாக தொழில் நடத்தி இன்று மாநிலம் முழுவதும் கிளைகளை ஓபன் செய்து தன்னுடைய அனுபவத்தில் இருந்து ஒரு விஷயத்தை சொல்ல வரும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பது வேதனைக்குரியது.. அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்புவது வேதனை அளிக்கிறது.. ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட..
அப்படி உரிமையாளர் என்ன குற்றத்தை செய்துவிட்டார்..? உடனே மன்னிப்பு கேட்க வைத்து அதை போட்டோவாக எடுத்து இணையத்தில் பதிவிடுவது சரியா..? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா..? தமிழ்நாட்டின் ,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நடந்த இந்த அவமனத்தை எல்லோரும் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
பாஜக ஒரு பாசிசம் சார்ந்த கட்சி என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் என்ன இருக்கிறது..? கடைசி வரை, பஜாகவிற்கு கொத்தடிமையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். என ஜோதிமணி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..