மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்களின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செந்தில் பாலாஜியை அண்ணாமலை குறி வைக்க காரணம் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கணிசமாக திமுக வெற்றி பெற்றதுதான்
தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றி பெற்றதுதான் அண்ணாமலை அவரை குறிவைக்க காரணம் என்றும், கடந்த ஆட்சி காலத்தில் விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடத்தும்போது ஆட்சியில் இருப்போர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
திமுகவை சார்ந்தவர்கள் வருமான வரி சோதனை நடத்தும் இடத்தில் பிரச்சனை செய்வதாக எனக்கு தெரிந்தவுடன் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் அங்கு இருக்கக்கூடாது என தெரிவிப்பதாக கூறினார்.
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சி வேகமாக இணைய நேர்ந்துள்ளது அதனை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சோதனையை செய்து வருகிறார்கள் எனக்குற்றச்சாட்டிய அவர், வருமான வரி சோதனையை வைத்து பழிவாங்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு செய்து வருவதாக தெரிவித்தார்.
திட்டமிட்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் இது போன்ற செயல்களை செய்து வருவதாகவும் கூறினார்.