இஸ்ரேல் தீவிர தாக்குதல்..!! பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு..!!
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனான் ஹிஸ்புல்லா என்ற அமைப்பு “ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல்” நடத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பும் பதிலடி கொடுத்துள்ளது. ஹிஸ்புல்லாவின் பதில் தாக்குதலை அடுத்து 48 மணி நேரத்துக்கு இஸ்ரேல் ராணுவ அவசர நிலையை அறிவித்தது. ஹிஸ்புல்லா படையினர் நேற்று நள்ளிரவு முதல் , வடக்கு இஸ்ரேல் மீது 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்..
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது.
இதனால் கடும் அதிர்ப்திக்குள்ளான ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள்., அவர்களின் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி மீதான தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும்
விதமாக ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்..
இந்நிலையில், தெற்கு லெபனானின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் சயீத் கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் ஹிஸ்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஹிஸ்புல்லா தாக்குதலை அடுத்து 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையில் போர் ராணுவ கூட்டம் நடந்த நிலையில், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..