குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தலைமைச் செயலத்தில் இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து சந்திராயன் மூன்று மாதிரி உருவ சிலையை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் ;
இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும், அதற்காக தமிழக அரசு 2000 ஏக்கர் நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். தமிழகம் தற்போது பல்வேறு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாகவும், குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்குநன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை, மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட தமிழகத்தை சுற்றியும் தொழில் வழித்தடங்களை தமிழக அரசு அமைத்து வருவதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். ஏசியன் விளையாட்டு போட்டியில் தமிழகம் வீரர்கள் 17 பேர் பதக்கங்கள் வென்றது பாராட்டத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா 50 ஆண்டுகள் பழமையானது என்றும் ஏவுகணைகள் ஸ்ரீலங்கா வழியாக செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது தற்போது குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைத்தால் எளிதாக சிறிய ராக்கெட்டுகள் செல்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திர கிரி ராகெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் விண்வெளி மற்றும் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்படும் இடமாக தமிழகம் விளங்குவது பாராட்டத்துக்குரிய பாராட்டுக்குரியது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.