ரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை

விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருமானவரித் துறையினர் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்திருந்தாலும், தற்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அணுப்பியுள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்புக்காக நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை வருமானவரித் துறையினர் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். மேலும், விஜய்யின் வீட்டிலும் இரு நாட்கள் சோதனை மேற்கொண்டனர், ஆனாலும் அவரது வீட்டில் எதுவும் கைப்பற்றவில்லை என வருமானவரித் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஷூட்டிங்கில் இருந்த விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரடியாக சென்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது விஜய்யும் ஷூட்டிங்கில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி தனது கைகளை அசைத்து கெத்து காட்டினார். விஜய் அரசியல் வரக்கூடும் என்பதால் அவர் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார் என அவரது ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கூறிவந்தனர்.

இதனை தடுக்கும் நோக்கத்திலும் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் மத்திய அரசும், தமிழக அரசும் முனைப்பு காட்டுகிறது. இதன் ஒருபகுதியாக விஜய்யின் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்த பின்னரும் அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. இது விஜய்யை வம்படியாக அரசியலுக்கு இழுக்கும் செயல் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி