இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்களை கண்காணிக்க தற்காலிக குழு நியமனம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
இந்த தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம். சோமையா மற்றும் மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் தேர்வு, விளையாட்டு போட்டிகளின் மேற்பார்வை மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அரியானா மாநிலம் சகாரா கிராமத்திற்கு சென்ற ராகுல்காந்தி, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, தீபக் பூனியா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.