ADVERTISEMENT
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதி..!! அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதி..?
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில், 20-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 1-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையும் , 6 ம் தேதி 2 ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்த பேச்சுவாரத்தையில் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னைக்கு பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியானதாகவும், 20-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 20-ஆம் தேதி மூன்று கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தாகவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
