அகத்த சீராக்கும் சீரகம்..!!
பெரும்பாலும் அதிகமாக உணவு சாப்பிட்டால் செரிமானத்திற்கு குளிர்பானங்களை தேடி ஓடுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்
இதில் ஒரு சிலர் சீரகத்தை மெல்லுவார்கள், அது செரிமானத்திற்கு மிக சிறந்த ஒன்றாகும்.
அது மட்டுமில்லாமல் நாம் சீரகம் உட்கொள்ளும் போது வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
செரிமானம்:
சீரகத்தில் உள்ள எண்ணெய் பொருட்கள் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களை தூண்டுகின்றன. வயிற்றில் இருக்கும் உணவுப் பொருட்களை செரிமானம் செய்து குடலில் தடை இல்லாமல் செல்ல உதவுகிறது.
வயிற்று கோளாறு:
சீரகத்தில் உள்ள அஸ்பட்ரிக் அமிலம் சாப்பிட பின் ஏற்படும் வாயுவை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வயிறு உப்பசமாக இருந்தாலும் அதை சரி செய்கிறது.
வாய் துர்நாற்றம்:
உணவிற்கு பின் சீரகம் சாப்பிடுவதால் அது வாய்க்கு நறுமணம் கொடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் வாசனை திரவியம் வாயில் ஏற்படும் துர்நாற்றங்களை நீக்கி செரிமானத்திற்கு உதவுகின்றன.
குடல் ஆரோக்கியம்:
சீரகத்தில் உள்ள அதிகப்படியான நார்சத்து குடலின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. மேலும் குடல் புண்கள், குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது.
வயிற்று புளிப்பு:
வயிற்றில் ஏற்படும் புளிப்பு தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை வராமல் சீரகம் தடுக்கிறது. சீரகத்தில் இருக்கும் இயற்கையான ஆண்டாசிட் தன்மையானது இவற்றிற்கு சரியான தீர்வாக இருக்கிறது.