சுற்றுலா சென்ற ஐடி உழியர்கள்.. கடலில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்..!
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 2 பெண் உள்ளிட்ட 6 ஊழியர்கள் இன்று இரு சக்கர வாகனத்தின் மூலம் சுற்றுலா வந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சென்று சுற்றி பார்த்து விட்டு, பின்னர் அங்கிருந்து சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய இளைஞர்களான சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஷாம்சுந்தர் (26), கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல்பிரசாத் (26) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதையடுத்து மற்றவர்கள் கூச்சல் எழுப்பியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இருவருரையும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்