பித்தளை பாத்திரங்களை இனி ஈசியா புதுசு போல மாற்றலாம்…!
ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட விருப்ப தெய்வம் என்பது இருக்கும். அந்த தெய்வத்திற்கு உகந்த நாட்களில் நீங்கள் பூஜைகளை செய்து வணங்குவதை பின்பற்றுவீர்கள். பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற நாட்களில் வீட்டை சுத்தம் செய்து பூஜை பொருளை கழுவி சாமி கும்பிடுவது வழக்கம். அப்படி பித்தளை மற்றும் செம்பு பொருட்களை சுத்தம் செய்வது என்பது பெண்களுக்கு ஒரு கடினமான வேலையாக இருக்கிறது.
ஆனால் நான் சொல்லும் இந்த டிப்ஸை பயன்படுத்தி எளிமையான முறையில் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்து புதுசு போல் ஆக்கலாம்.
1. உப்பு உடன் எலுமிச்சை சாறு: பித்தளை பாத்திரங்களை கழுவுவதற்கு உப்பு உடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து மிதமான வெந்நீரில் சுத்தம் செய்தால், பித்தளை பாத்திரம் பளப்பளவென்று ஜொலிக்கும்.
2. வினிகர் மற்றும் பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலந்த கலவையை பித்தளை பாத்திரங்களின் மேல் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து எடுக்க பித்தளை பாத்திரம் அப்படியே மின்னும்.
3. தக்காளி சாஸ்: பித்தளை பாத்திரங்களை கழுவ தக்காளி சாஸா என்று உங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும் ஆனால் இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்க, தக்காளி சாஸ் எடுத்து பித்தளை பாத்திரங்களின் மேல் தடவி நன்றாக தேய்த்து நீரால் அலச வேண்டும்.
4. வினிகர் மற்றும் மைதா: உங்கள் வீட்டில் இருக்கும் மைதா மற்றும் வினிகரை கலந்து பேஸ்டாக தயாரித்து பித்தளை பாத்திரங்களில் தடவி 2 மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைத்து பின் ஒரு துணியால் துடைக்க வேண்டும்.
5. பேக்கிங் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு: இரண்டையும் ஒன்றாக கலந்து பாத்திரங்களின் மீது தடவி அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து ஒரு பிரஷ் பயன்படுத்தி தேய்த்து வர பித்தளை மின்னும்.
6. புளி: புளியை பயன்படுத்தி பித்தளை பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்தால் புதுசு போல இருக்கும்.
7. மஞ்சள்: மஞ்சளுடன் சிறிது கடுகு எண்ணெய் கலந்து பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களில் தேய்த்து சுத்தம் செய்து வர பூஜை பொருட்கள் சுத்தமாகும்.