ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 7-ம் தேதி நிலைநிறுத்தபோவதாக தகவல் வெளியாகியுள்ளது…
ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 7-ம் தேதி லெக்ராஞ்சியன் புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 2- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
தொடர்ந்து சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி விண்கலம் சீரான வேகத்தில் பயணித்து வரும் நிலையில், இஸ்ரோ கட்டுப்பாட்டுமையத்தில் இருந்த விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 7-ம் தேதி ‘லெக்ராஞ்சியன்’ புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.