பெரம்பலூரில் புதிய காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
2022 நவம்பர் 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், ஓராண்டில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
400 கோடி முதலீட்டில் அமையப் பெற்றுள்ள காலணி தொழிற்சாலை மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
2028 ஆம் ஆண்டிற்குள் 2 ஆயிரத்து 440 கோடி முதலீட்டில் 29 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலணி தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்தார்.
பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்த அவர், வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
