February 27, 2020
Madhimugam
சினிமா தமிழ்நாடு

அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக ஐ.டி. ரெய்டு..!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் 3வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரி ஏய்ப்பு காராணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்.சினிமா தயாரிப்பு நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் மதுரையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யிடம் 20 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர்.

அப்போது, பிகில் படத்துக்கான ஊதியம், அதற்கு வரி செலுத்தப்பட்டதற்கான சான்று குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் எந்த ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என வருமானவரித்துறை விளக்கமளித்தது. அதேவேளையில்,  சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்தில் 300 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், காசோலைகள், 75 கோடி ரொக்கம் ஆகியவற்றை வருமானவரித்துறையினர் கண்பிடித்தனர். 3வது நாளாக இன்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Related posts

கொரோனா வைரஸ் பாதிப்பு? தீவிர கண்காணிப்பில் தமிழகம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

Digital Team

“கடிதம் இன்னும் கிடைக்கவில்லை” – கே.சி.பழனிசாமி

Digital Team

மதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

Digital Team

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு – குடிமகன்கள் கலக்கம்!

Digital Team

ரஜினியைக் கிண்டலடித்த நபர் கைது..!

superadmin

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Digital Team
You cannot copy content of this page
Madhimugam