ஜார்க்கண்ட்டில் தொடரும் ஐடி ரெய்டு..!! சொத்து மதிப்பு..?
கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கிய அமலாக்கதுறையின் சோதனை தற்போது வரை நீண்டு கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக காவேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் மருத்துவ சிகிச்சை முடிந்ததும் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கிடையில் ஜாமின் மனு வேண்டி மனு அளித்துள்ளார். அதன் பின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.., இந்நிலையில் 8 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடா்பாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக்டோடபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதனை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுக்கு பிறகு அந்த சோதனை நடத்தப்பட்டது.
அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். அதன் பின் அவரது அமைச்சர் பதிவியை விலக்க கோரி ஆளுநர் ரவி எதிர் வாதம் செய்தார். அதன் பின் சில நாட்களுக்கு முன் பொன்முடி மீது இருந்த வழக்குகள் விவாதிக்கப்பட்டு அவர் விடுதலையானார்.., அவரது பதவியே ஆளுநர் ரவியே பதவி பிராமணம் செய்து வைத்தார்.
டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை மார்ச் 21ம் தேதி இரவு கைது செய்தனர்.
இதே மதுபானக் கொள்கை வழக்கில் சில நாட்களுக்கு முன் பிஆர்எஸ் தலைவர் கேசி.ஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், டெல்லி முதல்வர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு இந்திய கூட்டணி காட்சிகள் மற்றும் உலக நாடுகளின் அதிபர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் கைது :
இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான 31 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

நில மோசடி வழக்கில் கைதாகி ராஞ்சி சிறையில் உள்ள ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சொத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஹேமந்த் சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நில மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சொந்தமான 31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.