சிறுநீரக கற்களை வெளியேற்றனுமா..?
மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது இதயம் அதுபோல உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு மிகவும் முக்கியமானது சிறுநீரகம். அந்த வேலை சீராக நடக்க சில தடங்கல்கள் இருக்கின்றன, காரணம் சரியான தண்ணீர் குடிக்காமல் இருத்தல், சாப்பிடும் உணவு பழக்க வழக்கம் என பல்வேறு காரணங்களால் கழிவுகள் தேங்கியிருக்கும்.
அப்படி தேங்கிய கழிவுகளை பின்பரும் உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சுலபமாக அகற்றலாம். வாங்க என்னவென்று பார்போம்.
அன்னாசி: அன்னாசி பழமானது பலவித ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதிலிருக்கும் ப்ரோமெலைன் என்ற பொருள் சிறுநீரகத்தில் இருக்கும் வீக்கத்தை குறைத்து சிறுநீரகம் சீராக செயல்பட உதவுகிறது.
ஆப்பிள்: தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் மருத்துவரையே பார்க்க தேவையில்லை என்று சொல்லுவார்கள். ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டை அதிகரித்து நோய்களை தடுக்க உதவும்.கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மாதுளை: மாதுளையில் இருக்கும் அதிகபடியான பொட்டாசியம் சிறுநீரகத்தில் உண்டாக்கும் கற்களை அகற்ற உதவுகிறது. சிறுநீரகத்தின் அமிலத்தன்மையை குறைக்கிறது. சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகலை வெளியேற்றுகிறது.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இது சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்கிறது. உடலில் இருக்கும் திரவங்களை சமநிலையாக வைக்கிறது.
பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழத்தை நீரில் 24 மணி நேரம் ஊறவைத்து பின் அதன் விதைகளை நீக்கி சாப்பிடும்போது அது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைத்து வெளியேற்றும். பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் அது சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது.