உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது. தமிழகத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் உள்ள திருச்சபைகளில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் கொண்டாடட்டங்கள் களையிழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தாலும் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் குடியரசு தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து பதிவில், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கட்டும்; கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், அவர் ஆற்றிய சேவையையும் நினைவு கூர்வோம்; கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் த்விட்டேர் பக்கத்தில், அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், இந்த பண்டிகை காலம் உங்கள் அனைவரையும் அன்பு மற்றும் சிரிப்பின் மகிழ்ச்சியுடன் அரவணைக்கட்டும். மேலும், குடியரசு தலைவர் முர்முவின் வாழ்த்து பதிவில், அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்நாளில் இயேசு கிறிஸ்து வழங்கிய கருணை மற்றும் சகோதரத்துவ செய்தியை நினைவு கூர்வோம். நாம் மகிழ்ச்சியையும் நேர்மறையையும் பரப்பி, சக உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் மீது இரக்க உணர்வைக் கொண்டிருப்போம். கூறினார்.
அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் #Christmas நல்வாழ்த்துகள்.
அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்! pic.twitter.com/gdwiIbgdDB
— M.K.Stalin (@mkstalin) December 25, 2022
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் கிறிஸ்துமஸ் வாழ்த்து பதிவில், அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் #Christmas நல்வாழ்த்துகள். அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.