“சாகுற வயசுல உள்ளவர்கள் நடிப்பதால் தான்..,” – ரஜினியை விமர்சித்த துரைமுருகன்!
கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சிறப்புரையாற்றியிருந்தார்.
அப்போது பேசிய அவர், கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் தான் துரைமுருகன் என்றும், அவரைப் போன்ற பழைய மாணவர்களை கையாள்வது மிகப்பெரிய விஷயம் என்றும் தெரிவித்திருந்தார். இவரது இந்த பேச்சுக்கு, மேடையில் சிரிப்பொலி பறந்தது.
இவ்வாறு இருக்க, நேற்று, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துரைமுருகன் குறித்து ரஜினி பேசியதை பற்றி, கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், “மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதினால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
அதை மறந்துட்டு ஏதோ ஒன்று ரஜினிகாந்த் பேசுகிறார்” என்று பதிலடி கொடுத்தார். இவரது இந்த பேச்சு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-பவானி கார்த்திக்